Thursday 29 December 2011

வட கொரியாவின் 'மகாத்மா'

                                                 வடகொரியா அதிபர் கிம்ஜொங் மரணம்:


          நம் ஆசிய கண்டத்தின் வளர்ச்சி அடைந்த, பலமிக்க நாடுகளில் ஒன்றான வடகொரியாவின்  அதிபர் கிம்ஜொங் மரணம் அடைந்துள்ளார் .

      இவர் உண்மையிலே மகாத்மாவா என்றெல்லாம்  தெரியவில்லை...ஆனால் இவரின் இறுதி ஊர்வலத்தில் அஞ்சலி செலுத்திய மக்கள் கதறி அழுததைப் பார்த்து நம் கண்களும் கலங்கத்தான் செய்தன.('நான் செத்தப் பிறகு எனக்குக்   கூடும் கூட்டம் சொல்லும்... நான் யாரென்று!' என்று நம்ம தல அஜித்தே   சொல்லியிருக்கிறாரே.) 

       வட கொரியா, சீனா போன்று ஒரு கம்யுனிசிய-ராணுவ ஆட்சி நடைபெறும் நாடுதான்.இங்கு குடும்ப ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது.இந்த விசயத்தில் நமக்கு இவர்கள் அண்ணன்....இவருக்கு முன்பு கிம்ஜொங் வின் தந்தை கிம் சங் அதிபராக இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து கிம் ஜொங் அதிபரானார். 17 ஆண்டு காலம் அதிபராக பதவி வகித்துள்ளார். இவரும் தனது தந்தை வழியில் ராணுவ ஆட்சியை நடத்தினார். இவர் மிகவும் சக்திவாய்ந்தவராக திகழ்ந்தார். 
  
            யாருக்கும் புரியாத புதிராக இருந்தார். அணு ஆயுத கொள்கையின் மூலம் அமெரிக்காவுக்கே ஆப்பு வைத்தவர்.இதன் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பானின் வயிற்றில் புளியைக் கரைத்தவர். இவருக்கு  சீனா, ரஷியா  போன்ற நாடுகளின் ஆதரவு இருந்ததே இதற்கு முக்கிய காரணம். அண்டை நாடுகளுடன் மோதும் நோக்கில், வடகொரியா ஏராள மான ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளது. சமீபத்தில்  “டேபோடாங்-2′ என்ற செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.  “செயற்கைக்கோள் சோதனை’ என்ற பெயரில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென்கொரியாவும், ஜப்பானும் குற்றம் சாட்டியுள்ளன. இது அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சென்று தாக்கவல்லதாம்.இவர் மற்ற நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தாலும் வட கொரிய மக்களுக்கு இவர் மகாத்மாவாகத்தான் தெரிகிறார்.

      கடந்த இரண்டு வருடமாக  இவருக்கு பக்க வாதம் வந்து தனது உடல்நலம் மிகவும் குன்றியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டே (2010) தனது 3-வது மகன் கிம்ஜொங் அங் என்பவரை அடுத்த அதிபராக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரெயிலில் சென்று கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இவரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வீரர்களும் கதறி அழுததைப் பார்க்கும் போது 'சென்டிமென்டில்' நம்மை விஞ்சிவிட்டார்களோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.....

     
                                             (சொல்லி வைத்தாற்போல் அழுகிறார்களே!!!!!!!)


------------------------((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))---------------------------

No comments:

Post a Comment